கே.கே.நகரை அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி (38). சினிமா துறையில் கார்பென்டராக பணி செய்து வருகிறார்.
இவரது மனைவி சுமித்ரா (35), கடந்த 3-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது, வீட்டின் கழிவறை அருகில் இருந்த ஷூவை எடுத்து வேறு இடத்தில் வைக்க முயன்றார். ஷூவுக்குள் இருந்த பாம்பு, சுமித்ராவின் கையில் கடித்துள்ளது.
இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு சுமித்ரா உயிரிழந்தார்.