தமிழகம்

கைவினை பொருட்கள் தயாரிக்க புழல் சிறை கைதிகளுக்கு பயிற்சி

செய்திப்பிரிவு

புழல் மத்திய சிறைக் கைதிகளுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஜவுளித் துறைக்கு உட்பட்ட கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவல கத்தின் முயற்சியால் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

கைவினைப் பொருட்கள் மேம் பாட்டு ஆணையரகத்தின் தென் மண்டல (சென்னை) இயக்குநர் எம்.பிரபாகரன் இப்பயிற்சியை புழல் சிறையில் கடந்த 2-ம் தேதி தொடங்கி வைத்தார். சென்னை சரக சிறைத்துறை டிஐஜி ஏ.முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பெங்களூரு கைவினைப் பொருட்கள் சேவை மையம் சார்பில் இப்பயிற்சி அளிக்கப்படு கிறது. பிரம்பு, மூங்கில், மண் பாண்ட கலைநயம், சாயக் கைவினை, தேங்காய் ஓடு கைவினை, மரச்சிற்பம் செதுக்கு தல், பாரம்பரிய ஓவியம், வண்ணம் தீட்டுதல் போன்ற பிரிவுகளில் கைதிகளுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2-ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி இன்றுடன் (6-ம் தேதி) முடிகிறது. பயிற்சியின்போது கைதிகள் தயாரித்த பொருட்கள் சிறை வளாகத்தில் இன்று மாலை 4 மணி அளவில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. சுமார் 35 கைதிகள் சொந்தமாக தொழில் தொடங்கும் அளவுக்கு கைவினைப் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT