பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.5) வெளியிட்ட அறிவிப்பில், ''வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேநேரம் கடலோரத் தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மணிக்கு 40-50 கி.மீ. வேகத்துக்கு சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவுப் பகுதிகளில் இன்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் கடவூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT