முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக விழுப்புரத் தைச் சேர்ந்த மாரியம்மாள், கஸ்தூரி, சாந்தாகுமாரி, ரங்கநாதன், பெத்து ரெட்டியார், ஷர்மிளா, பூங்காவனம், திருவாரூரைச் சேர்ந்த தங்கராசு ஆகியோர் இடி தாக்கி உயிரிழந்தனர்.
மேலும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த குர்ரப்பா, புதுக்கோட்டை சண்முகசுந்தரம், கருப்பையா, ராம நாதபுரம் கலைமுருகன், நெல்லை மந்திரமூர்த்தி ஆகியோரும் இடி தாக்கியதில் உயிரிழந்தனர். இவர் கள் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவிப்பதுடன், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரு.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள் ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.