தமிழகம்

மழைக்கால முன்னெச்சரிக்கையாக 50 ஆயிரம் மின்கம்பங்கள் வாங்க மின்வாரியம் திட்டம்

செய்திப்பிரிவு

மழைக்காலத்தின்போது சேதம் அடையும் மின்கம்பங்களை உட னடியாக மாற்றுவதற்கு வசதியாக, 50 ஆயிரம் மின்கம்பங்களை வாங்க மின்வாரியம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக் கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தவிர, திண்டுக் கல் உள்ளிட்ட சில உள் மாவட்டங்களும் பாதிப்புக்கு உள் ளானது. இப் புயலில் 3 லட்சத் துக்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. அந்நேரத்தில் மின்வாரியத்திடம் 60 ஆயிரம் மின்கம்பங்கள் மட்டுமே இருந்த தால், ஆந்திரா, தெலங்கானா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து மின்கம்பங்கள் வாங்கப் பட்டன.

இந்நிலையில், புதிய மின் வழித் தடங்களை அமைக்க மின் கம்பங்களை மின்வாரியம் வாங்கி வருகிறது. அத்துடன், தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள தால், கனமழையால் மின்கம்பங் கள் சேதம் அடைந்து, அதன் காரணமாக மின்தடை ஏற்படாமல் தடுப்பதற்காக, கூடுதலாக 50 ஆயிரம் மின்கம்பங்கள் வாங்க மின்வாரியம் தீர்மானித்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT