தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முக்தி அடைந்தார்.
தமிழகத்தில் தமிழ் வளர்த்த ஆதீனங்களில் பெரிய ஆதீனம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை யில் உள்ள தருமபுரம் ஆதீனமா கும். 500 ஆண்டுகளுக்கு முன்பு குருஞானசம்பந்தரால் தோற்றுவிக் கப்பட்ட இந்த ஆதீனத்தின் 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், 12.11.1971-ல் பதவியேற்றுக் கொண் டார். 27 சிவாலயங்கள் இவரது ஆளுகையின் கீழ் உள்ளன.
குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பர மாச்சாரிய சுவாமிகள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோ விலை அடுத்த சிறுகாட்டூர் கிராமத் தில் 1926-ல் பிறந்தார். இவர் சன்னி தானமாகப் பதவியேற்கும் வரை சென்னையில் உள்ள குருஞான பிரச்சார சபாவை நிர்வகித்து வந் தார். மயிலாடுதுறையில் அரசு கட்டி டங்கள், புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு நிலம் வழங்கியவர் இவர். அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கும் இடம் தரத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளைத் தொடங்கி கல்விச் சேவை செய்து வந்த இவர், கடந்த சில ஆண்டுக ளாக உடல்நலக் குறைவால் பாதிக் கப்பட்டு இருந்தார். தனக்குப் பிறகு தருமபுரம் ஆதீனத்தை நிர்வகிக்க திருவையாறு குமாரசாமி தம்பி ரானை 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக பரமாச்சாரிய சுவாமிக ளாக திருநாமம் மாற்றி இளைய சன்னிதானமாக நியமித்தார்.
மதுரை ஆதீனத்துக்கு இளைய சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் தலை மையில் தருமபுரத்தில் அனைத்து ஆதீனங்களும் கூடி தீர்மானம் நிறை வேற்றியது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிச.2-ம் தேதி மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு தஞ்சா வூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். நினைவு திரும்பாம லேயே நேற்று மதியம் 2.40 மணி அளவில் முக்தி அடைந்தார். அவரது உடல் நேற்று மாலை மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு கொண்டு வரப்பட்டு பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று(டிச.5) மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் இறுதிச்சடங் குகள் நடந்து முடிந்த பிறகு, இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக பரமாச்சாரிய சுவாமி கள் 27-வது ஆதீனமாக பொறுப் பேற்க உள்ளார்.
தலைவர்கள் இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ் ணன், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் சுவாமிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.