ஷூவுக்குள் பதுங்கி இருந்த பாம்பு கடித்த பெண், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை கே.கே.நகரை அடுத்த கன்னிகாபுரம், 3-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி(38). இவரது மனைவி சுமித்ரா(35). நேற்று முன் தினம் இரவு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் சுமத்ரா ஈடுபட்டிருந்தார்.
கழிப்பறை அருகில் இருந்த ஷூவை எடுத்து வேறு இடத்துக்கு மாற்றியுள் ளார். அப்போது, ஷூவில் பதுங்கி இருந்த பாம்பு ஒன்று சுமித்ராவின் கையில் கடித்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த அவர் வலியால் துடித்தார். அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அவரது கணவர் பழனி, ஆம்புலன்ஸ் மூலம் சுமத்ராவை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சுமித்ராவுக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "தற்போது மழைக்காலம் என்பதால் பாம்பு, பூரான், தேள் உள் ளிட்ட விஷ பூச்சிகள் வீட்டுக் குள் நுழைய வாய்ப்புள்ளது.
அதேபோல் ஷூ, செருப் புகளில் புகுந்து கொள்வதும் உண்டு. எனவே அவற்றைப் பயன்படுத்தும்போது கவனமுடன் செயல்பட வேண்டும்’’ என்றனர்.