தமிழகம்

காந்தியவாதி சசிபெருமாளுக்கு சங்ககால மரபுப்படி கள் படையல்: ஈரோட்டில் கள் இயக்க நிர்வாகிகள் வழிபாடு

செய்திப்பிரிவு

சங்க கால தமிழ் மரபுப்படி காந்தியவாதி சசிபெருமாளுக்கு கள் படையல் வைத்து தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஈரோட்டில் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமையில் மறைந்த காந்தியவாதி சசிபெரு மாளுக்கு சங்ககால தமிழ் மரபுப்படி கள் படையலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் மண் கலயத்தில் கள், பனம் பழம், வாழைப் பழம், தேங்காய் உள்ளிட்டவை படையலாக வைக் கப்பட்டு வழிபாடு செய்தனர்.

இதுகுறித்து நல்லசாமி கூறும் போது, ‘சங்க காலத்தில் மன்னர் கள், போரில் வீர மரணம் அடைந்த வர்கள், முதியவர்கள் உள்ளிட் டோருக்கு கள் படையல் வைக்கும் மரபு இருந்தது. அதற்கான ஆதாரம் புறநானூற்று பாடல்களில் உள்ளன. அதியமானும், ஔவையாரும் கள் அருந்தியதற்கான சான்றும், அதியமான் இறந்த பின்னர் அவரது சமாதியில் நடுகல் நட்டு அதன் அருகே கள், மயில்தோகை உள்ளிட்டவற்றை படையலாக வைத்து வழிபட்டதற்கான சான்று புறநானூற்றுப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

இதை முன்னுதாரணமாக கொண்டு தமிழர் மரபுப்படி, காந்திய வாதி சசிபெருமாளுக்கு கள் படையல் வழிபாடு நடத்தினோம். தொடக்கத்தில் கள்ளுக்கு எதிரான நிலைப்பாட்டை சசிபெருமாள் கொண்டிருந்தாலும், பின்னர் எங்களின் வாதத்தில் இருக்கும் உண்மையை புரிந்துகொண்டு கள் உணவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொண்டார்.

கள்ளுக்கு அனுமதி கோரி கன்னியாகுமரி முதல் சென்னை வரை 2 ஆண்டுக ளுக்கு முன்பு நடத்திய பேரணி யிலும், 21.1.2015-ல் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரத அறப்போராட்டத் திலும் எங்களுடன் சசிபெருமாள் பங்கேற்றார். ஆகவே, கள் இயக்க போராளியாக திகழ்ந்த அவருக்கு கள் படையல் வழிபாடு நடத்தி வீரவணக்கம் செலுத்தியுள்ளோம்’.

வழக்கை சந்திக்க தயார்

‘தமிழக மரபு சார்ந்த வழிபாட்டு முறையில் காந்தியவாதி சசிபெருமாளுக்கு கள் படைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக அரசு வழக்கு பதிவு செய்து, கைது செய்தாலும், அதனை சந்திக்க தயாராக உள்ளோம். ‘கள்’ உணவின் ஒரு பகுதியே தவிர, அது மது விலக்கு அமலாக்க பிரிவு சட்டத்தின் கீழ் வரவில்லை’ என்றார்.

நல்லசாமியின் மீது அவதூறு வழக்கு

காந்தியவாதி சசிபெருமாளின் மகன் விவேக் கூறும்போது, ‘எனது தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தமிழக கள் இயக்க நிர்வாகிகள் நடந்துள்ளனர். இதுசம்பந்தமாக என் தந்தை உருவாக்கிய தேசிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகளை கலந்தாலோசித்து, நல்லசாமி உள்ளிட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்’ என்றார்.

SCROLL FOR NEXT