பாலிசிதாரர்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் சேவைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்தில் பாலிசி எடுத்துள்ள காப்பீடுதாரர்கள் தங்களது பாலிசி பிரீமியம், அதை முன்கூட்டியே செலுத்துதல், பாலிசி மீது பெற்றுள்ள கடனுக்கான தவணை, கடன் வட்டி ஆகியவற்றை கிரெடிட் கார்டு மூலம் மின்னணு பரிவர்த்தனை முறையில் செலுத்துகின்றனர்.
இதற்காக, கிரெடிட் கார்டு நிறுவனங்களைப் பொறுத்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மின்னணு பரிவர்த்தனையை ஊக்கப்படுத் தும் விதமாக, டிசம்பர் 1-ம் தேதி முதல் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், அதற்கான சேவைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என எல்ஐசி நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.