பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதியில் உருவான நுரைக்கு அடையாற்றில் இருந்த துணி சோப்பு படிமங்களே காரணம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் நொய்யல் ஆறு, தென்பெண்ணை ஆறு ஆகியவற்றிலும் பெங்களூரில் பெலந்தூர் ஏரியிலும் உள்ள நீரில் அவ்வப்போது நுரை பொங்குவது வழக்கமாகும்.
அதேபோன்று சென்னை பட்டினப்பாக்கம் கட லோரப் பகுதிகளில் கடல் நீரில் கடந்த சில தினங்களாக அதிக அளவில் நுரை பொங்கி காற்றில் பறந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதை அறிந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அப்பகுதியில் பார்வையிட்டு, நீர் மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு முடிவு குறித்து மாசுக கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள் தற்போது விளக்கம் அளித் துள்ளனர். அவர்கள் கூறியதாவது: அடையாற்றில் பல ஆண்டுகளாக கழிவுநீர் விடப்பட்டு வருகிறது. அதனால் கழிவுநீரில் கலந்திருக்கும் துணி சோப்பில் சேர்க்கப்படும் டிடர்ஜெண்ட் வகை ரசாயனங்கள் ஆற்றின் கரையோரங்களில் படிந்துவிடுகிறது. மழை காலங் களில், ஆற்றில் நீர் அதிகமாக வரும்போது, இந்த துணி சோப்பு படிமங்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்படும்.
அங்கு ஆற்று நீரும் கடல் அலையும் எதிரெதிரே மோது ம்போது நுரை ஏற்படுகிறது. தற் போது அடையாற்றில் தூர் வாரும் பணிகள் நடைபெறுவதால், ஆற்றில் அடியில் ஏற்கெனவே படிமங்களாக இருந்த டிடர்ஜெண்ட் ரசாயனங்கள் வெளியில் வருகின் றன.
இந்நேரத்தில் கனமழை பெய்வதால், டிடெர்ஜென்ட்கள் கடலுக்குச் சென்று, நுரை ஏற்ப டுவது அதிகமாகிறது.
இதுபோன்ற ரசாயனங்களால் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இதன் வாசனை வரும்போதே அவை அந்த பகுதிகளுக்கு வருவதை தவிர்த்துவிடும். மேலும் மனிதர்கள் மீது இந்த நுரை பட்டால், அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து லேசான அரிப்பு ஏற்படலாம். இவ்வாறு நுரை பொங்குவது மழை காலங்களில் மட்டுமே ஏற்படும். இதற்காக யாரும் அச்சமடையத் தேவையில்லை. தற்போது நுரை ஏற்படுவது குறைந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.