தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி நேற்று அறிவித்தார். உடன், மாநில தேர்தல் ஆணைய செயலர் எல்.சுப்பிரமணியன்.படம்: ம.பிரபு 
தமிழகம்

தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து உடனடியாக ஊரக உள்ளாட்சிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

செய்திப்பிரிவு

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதன்படி, வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர் தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனி சாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங் களுக்கு உட்பட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகளை கடை பிடித்து, தேர்தல் அமைதியாக வும், நேர்மையாகவும், சுதந்திர மாகவும் நடைபெற எல்லாவிதங் களிலும் தேர்தல் ஆணையத்தோடு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், ஒரே நேரத்தில் அரசு சார்பிலும், தேர்தல் பிரச்சாரத்துக்காகவும் அமைச்சர்கள் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு செல்ல முடியாது. பிரச்சாரத்தின்போது அரசு வாகனங் களை பயன்படுத்த முடியாது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நலதிட்டங்கள் எதையும் தொடங் கக் கூடாது. அரசு சார்பில் அடிக்கல் நாட்டு விழாக்களையும் நடத்தக்கூடாது. பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்க முடி யாது. அப்பகுதிகள் பலன் பெறும் வகையில் அறிவிப்புகளையும் வெளியிடக்கூடாது. நிதிகள் எதுவும் ஒதுக்கக்கூடாது. புதிய திட்டங் களுக்கான டெண்டர்கள் எதுவும் கோரக்கூடாது. அரசியல் கட்சிகள் பிரச்சார கூட்டங்களை நடத்துவதாக இருந்தாலும், ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவதாக இருந்தாலும், தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றே மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

SCROLL FOR NEXT