தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை இயக்க மேலாளராக நீனு இட்டியெரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய ரயில்வே சர்வீஸ் தேர்வில் கடந்த 1988-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் நீனு இட்டியெரா.
இவர், ரயில்வேயில் கட்டமைப்பு, திட்டமிடல், சரக்கு ரயில்கள் இயக்கம் மற்றும் டிக்கெட் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதேபோல், திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார்.
இதற்கிடையே, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு நவம்பர் வரையில் பணியாற்றியுள்ளார்.
தெற்கு ரயில்வேயில் தலைமை இயக்க மேலாளராக பணியாற்றி வந்த எஸ்.அனந்தராமன் கடந்த வாரம் ஓய்வு பெற்றார். இந்நிலையில், இந்த தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை இயக்க மேலாளராக நீனு இட்டியெரா நியமிக்கப்பட்டார். அவர் சென்னையில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.