‘ஆதர்ஷ் ஸ்மாரக்’ எனும் `மாதிரி புராதன சின்னங்கள்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் மற்றும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்களை புனரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய கலாச்சாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொல்லி யல் துறை நாடு முழுவதும் உள்ள 3,680 புராதன சின்னங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட் டுள்ளது. அவ்வப்போது புதிய திட்டங்கள் வாயிலாக புராதன சின்னங்களை சீரமைத்து, புன ரமைக்கும் பணிகளை மேற் கொண்டு வருகிறது. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புராதன சின்னங்களை பார்வை யிடவும், சின்னங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளவும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில்,‘ ஆதர்ஷ் ஸ்மாரக்’ எனும், ` மாதிரி புராதன சின்னங்கள்’ திட்டத்தை மத்திய தொல்லியல் துறை கொண்டுவந்துள்ளது. இத்திட்டத் தில் முதல் கட்டமாக, உத்தர பிரதேசத்தில் தாஜ்மகால், டெல்லி யில் செங்கோட்டை, ஹுமாயூன் கல்லறை உள்ளிட்ட 25 புராதன சின்னங்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளன. தமிழகத்தில் மாமல்ல புரம் கடற்கரை கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் இத்திட்டத் தின் கீழ் வருகின்றன.
இதுகுறித்து சென்னை வட்ட தொல்லியல் கண்காணிப்பாளர் கே.லூர்துசாமி கூறியதாவது:
`ஆதர்ஷ் ஸ்மாரக்’ எனப்படும் மாதிரி நினைவுச் சின்னம் திட்டத் தின் கீழ், `ஏ கிளாஸ்‘ அடிப்படையில் 25 நினைவுச் சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தின் இரண்டு கோயில் களும் அடக்கம். இத்திட்டத்தின் கீழ், கோயிலின் வரைபடம், தற் போதைய நிலையில் தயாரிக்கப் பட்டு, சிதைவுள்ள பகுதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது.
கோயிலின் பாரம்பரியம் குறித்த தகவல் பலகை, சுற்றுலாப் பயணிகள் வந்து அமர்ந்து பார்வை யிடுவதற்கான வசதி, சுற்றுலாப் பயணிகள் சுற்றி வருவதற்கான நடை பாதை, `வை-பை’ வசதி, குடிநீர், கழிவறை வசதிகள், கோயில் குறித்த 5 நிமிட ஒளிப் படக் காட்சி, சுற்றுலாப் பயணி கள் வசதிக்காக சிறிய நவீன உணவகம் ஆகியவையும் அமைக் கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தற்போது கோயில்களின் வரைபடம் தயாரிக்கப்பட்டு, அனுப்பப்பட் டுள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பல்வேறு இடங்களில் கடல் காற்று, கடல் மண் படிவதால் அரிப்பு ஏற்பட்டு, சிற்பங்களில் சிதைவு ஏற்பட்டுள்ளது இதில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மேலும் பாதிப்பு ஏற்படாத வகை யில் பாதுகாக்க இத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
`ஆதர்ஷ் ஸ்மாரக்’ திட்டத்தின் கீழ் இரண்டு கோயி்ல்களை பாது காப்பது குறித்த குறித்த திட்ட அறிக்கை தொல்லியல் துறை தலைமையகத்துக்கு அனுப்பப்பட் டுள்ளது. இருப்பினும் இத்திட்டத் தின் கீழ் ஒரு சில அடிப்படை பணிகளை தற்போது தொடங்கி யுள்ளோம். திட்டத்துக்கான ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.