பிரதம மந்திரியின் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கான ஓய்வூதிய அட்டைகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோஃபர் கபீல், தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் முகமது நசிமுத்தீன், தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் அ.யாஸ்மின் பேகம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் செயலாளர் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தமிழகம்

பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் நிலோஃபர் கபீல் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பிரதமரின் தொழிலாளர் ஓய்வூதி யத் திட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளர்கள், சிறு வணிகர் களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகளை தொழிலாளர் நலத் துறை அமைச் சர் நிலோஃபர் கபீல் கேட்டுக் கொண்டார்.

பிரதம மந்திரியின் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அமைப் புசாரா தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கான ஓய்வூதிய அட்டைகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோஃபர் கபீல், தொழிலாளர் களுக்கு ஓய்வூதிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள், பிரதம மந்திரி யின் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் மூலம் பயன்பெறும் வகையில் நவ.30 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை ஓய்வூதிய வாரம் கொண்டாடப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் 18 வயது முதல் 40 வயது உடையவர்கள், மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெறலாம். மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.55 முதல் அதிகபட்சம் ரூ.200 வரை பிரீமியம் செலுத்தலாம். இதற்கு இணையான பிரீமியத் தொகையை மத்திய அரசு செலுத்தும். வருமான வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது.

அமைப்புசாரா தொழிலாளர்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவு செய்து, அடையாள அட்டை பெற்று 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம். தமிழத்தில் இதுவரை 54,549 பேர் பதிவு செய்திருக் கின்றனர். ஆண்டுக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு மிகாமல் வணிகம் செய்யும் சிறுவணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 211 பேர் பதிவு செய்துள்ளனர். ஓய்வூதியத் திட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் சேருவதற்கு அதிகாரிகள் தீவிரமாகப் பணி யாற்ற வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் தொழி லாளர் ஆணையர் அ.யாஸ் மின் பேகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலா ளர் எம்டி.நசிமுத்தீன், தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT