விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கென தனியாக முகநூல் பக்கம் ஒன்று இருக்கிறது. அந்தப் பக்கத்தில் இன்னமும் பழைய ஆட்சியர் சிவஞானம் ஐஏஎஸ்.,ஸின் படமே உள்ளது. படமும் மாற்றப்படவில்லை ஆட்சியரின் பெயரும் மாற்றப்படவில்லை.
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக கடந்த 31.07.2016-ல் பொறுப்பேற்றவர் சிவஞானம் ஐஏஎஸ். 3 ஆண்டு கால சேவைக்குப் பின் இவர் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்குப் பதிலாக கடந்த 18.11.19-ல் இரா.கண்ணன் ஆட்சியராகப் பொறுப்பேற்றார். ஆனால், இன்றைய தேதி வரை ஆட்சியர் அலுவலக முகநூல் பக்கத்தில் விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது இது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கைவிரித்தனர். ( https://www.facebook.com/collvnr.collvnr )
ஆனால், உண்மையில் ஆட்சியர் அலுவலக முகநூல், சமூக ஊடகப் பக்கங்களை நிர்வகிப்பது பிஆர்ஓ., அதிகாரிகளின் வேலையே. எனவே, மழுப்பலாக அவர்கள் பதில் சொல்வதால் பழைய விசுவாசம் காரணமாக இன்னமும் புகைப்படத்தைப் பெயரை மாற்ற மனமில்லையோ என்று ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது.