கோப்புப் படம் 
தமிழகம்

நிரம்பி வழியும் அரும்பாவூர் பெரிய ஏரி

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதியில் பெய்த கன மழையால் வேப்பந்தட்டை, அரும்பாவூர் பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இதன்காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரி நேற்று காலை நிரம்பி வழிந்தது. இதையடுத்து, ஏரியின் உபரி நீர் கடைக்கால் வழியாக திறந்துவிடப்படுகிறது. கடல்போல காட்சியளிக்கும் அரும்பாவூர் ஏரியைக் காணவும், அதை படம் பிடிக்கவும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏரிக்கு வந்து செல்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): பாடாலூர் 21, பெரம்பலூர் 20, லப்பைக்குடிகாடு 15, செட்டிக்குளம் 13, எறை யூர் 13, அகரம் சீகூர் 12, புதுவேட்டக்குடி 10, வேப்பந்தட்டை 9, வி.களத்தூர் 7, கிருஷ்ணாபுரம் 6.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மற்றும் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): பாலவிடுதி 24.10, மாயனூர் 16, கடவூர் 15, கிருஷ்ணராயபுரம் 10, கரூர் 8.30, அணைப்பாளையம் 8.20, பஞ்சப்பட்டி, மைலம்பட்டி தலா 8, க.பரமத்தி 5.60, குளித்தலை 4, அரவக் குறிச்சி 1. மாவட்டத்தில் மொத்த மழையளவு 108.20 மிமீ.

திருச்சி மாவட்டத்தில்...

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): துவாக்குடி 49.60 புள்ளம்பாடி 35.60, பொன்னணியாறு அணை 22, கல்லக்குடி, நந்தியாறு தலைப்பு 20.20, தென்பரநாடு 16, லால்குடி 15.20, சமயபுரம் 14.20, விமான நிலையம் 10.30, பொன்மலை 10, திருச்சி ஜங்ஷன் 7.80.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு (மி.மீ): ஜெயங்கொண்டம் 67, அரியலூர், திருமானூர் தலா 40, செந்துறை 37.

SCROLL FOR NEXT