திமுக இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்காக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நேர்காணல் நடத்தும் மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். உடன். மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு. படம்: ஜி.ஞானவேல்முருகன் 
தமிழகம்

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயார்: உதயநிதி ஸ்டாலின் கருத்து

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க திமுக தயாராக உள்ளதாக அக் கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக நேர்காணல் நடத்தி வருகிறார்.

இதன் ஒருபகுதியாக திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணியினருக்கான நேர்காணல் திருச்சியில் நேற்று தொடங்கியது. திமுக மாவட்டச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் கே.என்நேரு (தெற்கு), காடுவெட்டி தியாகராஜன்(வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 600 பேரிடம் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், எம்எல்ஏவு மான அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். வடக்கு மாவட்ட இளைஞரணி யினருக்கு இன்று நேர்காணல் நடைபெற உள்ளது.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, ‘‘உள்ளாட்சித் தேர் தலைச் சந்திக்க திமுக எந்நேரமும் தயாராக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என நாங்கள் சொல்லவில்லை. அதை, முறைப்படி நடத்த வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT