செங்கல்பட்டில் நேற்று நடந்த புதிய மாவட்ட தொடக்க விழாவில், கறவை மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். முன்னதாக, பயனாளிகளுக்கு வழங்க இருந்த கறவை மாட்டுக்கு முதல்வர் கீரை வழங்கினார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். 
தமிழகம்

செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா: புதிய திட்டங்கள் முதல்வர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத் தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி ரூ.128 கோடி மதிப்பிலான 213 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், மாவட்டத்தில் புதிய தடுப்பணை திட்டங்களையும் அறிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத் தொடக்க விழாவும் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நேற்று செங் கல்பட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் பழனி சாமி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங் கல் துறை, வேளாண் துறை, நெடுஞ்சாலைத் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட துறைகளின் சார் பில் செங்கல்பட்டு மாவட்டத்துக் காக செயல்படுத்தப்பட உள்ள ரூ.128 கோடி மதிப்பிலான 213 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஏற்கெனவே ரூ.113.93 கோடியில் 181 நிறைவுற்ற பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

செங்கல்பட்டு புதிய ஆட்சியர் அலுவலகத்துக்கான 7 மாடி கட்டிடத் தின் மாதிரியை திறந்து வைத்து, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

40 கோடியில் தடுப்பணை

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: செங்கல் பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், இரும்புலிச்சேரி கிராமத் தில் பாலாற்றின் குறுக்கே 40 கோடி யில் தடுப்பணை கட்டப்படும்.

இதன்மூலம் 2,340 ஹெக்டேர் விவ சாய நிலம் பாசன வசதி பெறும். திருப்போரூர் வட்டம், பஞ்சம்தீர்த்தி மானாமதி கிராமம் அருகே ரூ.5 கோடியில் தடுப்பணை கட்டப்படும். செம்பூண்டி கிராமத்தில் 4.5 கோடி யில் தடுப்பணை கட்டப்படும்.

மாமல்லபுரம் பகுதியைச் சுற்றிப் பார்க்க ரூ. 50 கட்டணத்தில் சிறப்பு குளிர்சாதனப் பேருந்து வசதி, கீரப் பாக்கம் கிராமத்தில் 1,520 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்படும், அதேபோல் முருங்கமங்கலம் கிராமத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 1,200 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு புதிய திட்டங் களை அறிவித்துப் பேசினார்.

SCROLL FOR NEXT