பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 
தமிழகம்

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

செய்திப்பிரிவு

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் தைப்பொங்கலின்போது தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பொங்கல் பரிசில் ரூ.1,000 வழங்கப்படும். அதுதவிர, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை பொங்கல் பரிசில் இருக்கும்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதன்படி பொங்கல் பரிசு ரூ.1,000 மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில், இத்திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

SCROLL FOR NEXT