மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளைபோல ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரத்தை பயன்படுத்துவதற்கு அவச ரச் சட்டம் மூலம் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணி களை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவி களுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டம் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது.
இதன்மூலம், நகர உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர்கள் ஒரேயொரு வாக்குப் பதிவு செய் தால் போதுமானது. எனவே, இந்த இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப் படுகிறது. அதேநேரம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கிராம ஊராட்சி வார்டு, ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட் சிக் குழு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு மக்கள் வாக் களிக்க வேண்டும். அதனால், இந்தத் தேர்தலில் மின்னணு இயந்திரங் கள் பயன்படுத்துவதில்லை.
நான்கு வாக்குகளை வாக் காளர்கள் பதிவு செய்ய வேண்டி இருப்பதால், பல வண்ண வாக் குச்சீட்டு முறையே தற்போது வரை இருக்கிறது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் வகையில், ஊராட்சிகள் சட்டத்தில் திருத் தம் செய்து அனுமதி அளிக்கும்படி தமிழக அரசிடம் மாநில தேர்தல் ஆணையம் கோரியது.
அதேபோல, ஊராட்சி ஒன்றி யம் அல்லது மாவட்ட ஊராட்சி களின் தலைவர் பதவிகளில் இயல் பான காலியிடம் ஏற்பட்டு, அப்பதவி களுக்கு துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டால், துணைத் தலைவர் பதவியிடங்கள் முடி வுக்கு வருவது குறித்தும் ஊராட்சி சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று ஆணையம் கோரியது.
இதை ஏற்று, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தைப் பயன்படுத்தும் வகை யிலும், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களின் துணைத் தலைவர்கள் பதவி முடிவுக்கு வருவது தொடர்பாகவும் ஊராட்சி கள் சட்டத்தில் திருத்தங்கள் செய் யப்பட்டுள்ளது.
ஆளுநர் ஒப்புதல்
தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடக்காத நிலையில், ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று இதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த அவசரச் சட்டம் குறித்த தகவல் தமிழக அரசிதழில் வெளி யிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணைய செயலர் சுப்பிரமணியம் கூறும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கிராம ஊராட்சிகளில் நடக்கும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் பயன்படுத்த உத்தேசிக் கப்பட்டுள்ளது’’ என தெரிவித் துள்ளார்.