தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை காவல் கட்டுப் பாட்டு அறை எண் 100-க்கு நேற்று இரவு 9 மணியளவில் பேசிய ஒருவர், அண்ணா அறிவாலயத் தில் வெடிகுண்டு வைத்திருப்ப தாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார். அதைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறி வாலயத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய்களுடன் சுமார் 2 மணி நேரம் சோதனை நடந்தது. இதில், சந்தேகப்படும் விதத்தில் பொருட்கள் எதுவும் சிக்க வில்லை. அதைத் தொடர்ந்து வெடிகுண்டு புரளி என்று தெரியவந்தது. செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் இந்தியில் பேசியுள்ளார். சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்கும் முயற்சியில் தேனாம்பேட்டை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.