மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில், போயஸ் கார்டன் வீட்டில் பூஜைகள் செய்து வழிபட வேண்டும் என்பதால், அவரது சொத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பை விரைவாக பிறப் பிக்கக் கோரி ஜெ.தீபா சார் பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப் பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள் ளது. இந்த வழக்கில் ஜெய லலிதாவின் உறவினர் களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரும் எதிர் மனுதாரர் களாகச் சேர்க்கப்பட்டுள் ளனர்.
இந்த வழக்கில் வருமான வரித் துறையும் தங்களுக்கு ரூ.40 கோடி பாக்கியிருப்ப தால் சில சொத்துகளை முடக்கி வைத்துள்ளதாகப் பதில் மனு தாக்கல் செய்துள் ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் என்.கிரு பாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங் கிய அமர்வு, தேதி குறிப் பிடாமல் தள்ளிவைத் துள்ளனர்.
இந்நிலையில், ஜெ.தீபா தரப்பு வழக்கறிஞர் தொண் டன் சுப்ரமணியன், நீதிபதி என்.கிருபாகரன் முன்பாக நேற்று ஆஜராகி, ‘‘ஜெயலலி தாவின் நினைவு தினம் இன் னும் சில தினங்களில் வர உள்ளது.
அன்றைய தினம் அவர் வாழ்ந்த போயஸ் கார் டன் இல்லத்தில் சம்பிரதாய முறைப்படி பூஜைகள் மற் றும் பரிகாரங்கள் செய்து வழிபட வேண்டும். ஆனால் போலீஸார் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். எனவே ஜெயலலிதாவின் சொத்து களை நிர்வகிப்பது தொடர் பான வழக்கின் தீர்ப்பை விரைவில் பிறப்பிக்க வேண் டும்’’ என முறையீடு செய்தார்.
இதுதொடர்பாக பரிசீலிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.