தமிழகம்

இயற்கை வளத்தைப் பாதுகாக்க எம்.சாண்ட் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

கி.மகாராஜன்

இயற்கை வளத்தைப் பாதுகாக்க எம்.சாண்ட் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சோஷியல் ஜஸ்டிஸ் ஃபோரம் எனும் அமைப்பின் செயலர் இருளாண்டி, தமிழகத்தில் ஆற்றுப்படுகைகளிலிருந்து மணல் எடுப்பதை முற்றிலும் தடுக்கும் வகையில் மணல் எடுப்பதற்கு தடை விதித்து உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் மணல் திருட்டை தடுக்க முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது நீதிபதிகள், "மணலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் எம் சாண்ட் பயன்பாட்டை அதிகரிப்பது, மணல் இறக்குமதியை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

ஆற்று மணல் தேவைப்படுவோர் கட்டிட வரைபட அனுமதியை வழங்கி தேவைப்படும் மணலை மட்டும் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT