பாபநாசம் அணை 
தமிழகம்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழை : பாபநாசம் அணை நிரம்பியது 

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் ராமநதி அணையில் 8 மி.மீ., குண்டாறு அணையில் 4 , கடனாநதி அணை, சங்கரன்கோவில், தென்காசியில் தலா 2 , கருப்பாநதி அணையில் 1 மி.மீ. மழை பதிவானது.

நேற்று பகலில் தென்காசி, பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. கடனாநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகள் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன. அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருந்தது. இந்நிலையில், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதால் நேற்று நீர்மட்டம் 131.50 அடியாக இருந்து. ராமநதி அணை நீர்மட்டம் 78.50 அடியாக இருந்தது.

பாபநாசம் அணை நிரம்பியது

பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 1,946 கனஅடி நீர் வந்தது. பாபநாசம் அணை நேற்று நிரம்பியதால் நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,396 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 143 அடி உயரம் உள்ள இந்த அணையில் நீர்மட்டம் நேற்று 142.35 அடியாக இருந்தது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் இரண்டரை அடி குறைந்து 150.52 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,467 கனஅடி நீர் வந்தது. 35 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 75.75 அடியாக இருந்தது.

மழை அளவு

இதுபோல், திருநெல்வேலி மாவட்டத்திலும் லேசான மழை பெய்தது. பாபநாசம், ராதாபுரத்தில் தலா 7 மி.மீ., சேர்வலாறு, மணி முத்தாறில் தலா 6, நாங்குநேரியில் 5.30, திருநெல்வேலியில் 3.60, அம்பாசமுத்திரத்தில் 3, சேரன் மகாதேவியில் 1.60 மி.மீ. மழை பதிவானது.

SCROLL FOR NEXT