மா.சுப்பிரமணியம்: கோப்புப்படம் 
தமிழகம்

நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியம், அவரது மனைவி நேரில் ஆஜராக குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

நில அபகரிப்பு வழக்கில் சைதாப்பேட்டை எம்எல்ஏ மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் டிசம்பர் 12-ம் தேதி நேரில் ஆஜராக சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த போது, கிண்டியில் தொழிலாளர்களுக்கு ஒத்துக்கப்பட்ட நிலத்தை அபகரித்து விட்டதாக அவர் மீதும், அவரது மனைவி காஞ்சனா மீதும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தனர்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருவரும் இன்று (நவ.28) சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி ராஜ்குமார் முன்பு, மா.சுப்பிரமணியம், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் ஆஜரான நிலையில், மீண்டும் வரும் டிசம்பர் 12-ம் தேதி இருவரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT