தமிழகம்

திருப்பத்தூர், ராணிப்பேட்டை இன்று ஒரே நாளில் 2 மாவட்டங்கள் உதயம்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களையும் முதல்வர் பழனிசாமி இன்று ஒரே நாளில் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடியும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணமும் மற்றும் வேலூர் மாவட்டத்தில் புதிதாக குடியாத்தம் வருவாய் கோட்டத்துடன் கே.வி.குப்பம் என்ற புதிய வருவாய் வட்டமும் ஏற்படுத்தப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா, திருப்பத்தூர் டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் தொடக்க விழா, ராணிப்பேட்டை கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT