பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதால் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு சுற்றிச் செல்வதைத் தவிர்ப்பதற்காக நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வெட்டாற்றில் கழுத்தளவு நீரில் இறங்கி ஆற்றைக் கடக்கின்றனர் பள்ளி மாணவர்கள்.
கீழ்வேளூரை அடுத்த ஒக்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஒக்கூர், கடமங்குடி, மூங்கில்குடி, விளாம் பாக்கம், மூலப்படுகை ஆகிய கிரா மங்களில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவருமே விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளிகள்.
விளாம்பாக்கம் - கோகூர் கிரா மங்களை இணைக்கும் வகையில், வெட்டாற்றின் குறுக்கே கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம் பாட்டு நிதி ரூ.6 லட்சத்தில் மரப் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தப் பாலம் வழியாக பொதுமக்கள் அக் கரைக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் நாகை, கீழ்வே ளூர், திருவாரூருக்கும் சென்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 மாதங் களுக்கு முன் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டபோது இந்த மரப்பாலம் தண் ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக் குள்ளாகினர்.
ஆற்றைக் கடக்காமல் விளாம் பாக்கம் அருகில் உள்ள நிரந்தர பாலம் வழியாகச் செல்ல வேண் டும் என்றால் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இதனால் நேர மும் அதிகம் ஆகும் என்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் கழுத் தளவு தண்ணீரில் இறங்கி ஆற் றைக் கடந்து அக்கரைக்குச் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறிய போது, "நிரந்தர பாலம் வழியாகச் செல்ல வேண்டும் என்றால் 10 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து செல்ல வேண்டும். அந்த வழியாகச் செல்ல வேண்டுமென்றால் அதிக நேரம் பிடிக்கும் என்பதால் நாங்கள் மாற்று உடை அணிந்துகொண்டு ஆற்றில் இறங்கி தண்ணீரை கடந்து அக்கரைக்குச் சென்றதும், சீருடையை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்வோம்" என்றனர்.
சிறுவர்களை அவர்களது தந்தை அல்லது உறவினர்கள் தங்களின் தோளில் தூக்கிக்கொண்டு ஆற் றைக் கடந்து அக்கரையில் விடுகின்றனர்.
தற்போது மழைக்காலம் என்ப தால் ஆற்றில் தண்ணீர் திடீரென்று அதிக அளவில் செல்கிறது. இத னால் பள்ளி மாணவ, மாணவிகள், நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீ ரில் அடித்துச் செல்லப்பட வாய்ப் புள்ளது. எனவே, அபாயத்தை தவிர்க்க தற்காலிகமாக மரப்பாலம் அமைத்துத் தர வேண்டும். விரை வில் நிரந்தர பாலம் கட்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.