தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் எஸ்.பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, டிசம்பரில் தேர்தல் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ஆட்சியருடன் ஆலோசனை
ஏற்கெனவே, உள்ளாட்சித் தேர்தலுக்கு ஏற்றவாறு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, வரைவு பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது. இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் மாநில தேர் தல் ஆணையர் எஸ்.பழனிசாமி 3 முறை ஆலோசனை நடத் தினார்.
அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்து வது, வாக்குப்பதிவு மைய அலு வலர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கு வது, வாக்குச்சாவடியில் உள்ள அடிப்படை வசதிகளை உறுதி செய்வது உள்ளிட்டவை தொடர் பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும் தென்மாவட்டங் களுக்கு நேரில் சென்று தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, விரைவில் உள் ளாட்சித் தேர்தல் அறிவிக்கப் பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை கோயம் பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில், அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி களுடனான ஆலோசனைக் கூட் டம் இன்று காலை 11.30 மணி அளவில் நடக்க உள்ளது.
மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், தேர்தலை எத்தனை கட்டமாக நடத்துவது, நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ள தாக கூறப்படுகிறது.