மின்விபத்துகளால் உயிரிழப் பவர்களின் குடும்பத்துக்கு வழங் கப்படும் நிவாரணத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்ச மாக மின்வாரியம் உயர்த்தி யுள்ளது.
மழை மற்றும் புயலின்போது மின்கசிவு ஏற்பட்டு மின்விபத்து ஏற்படுகிறது. வீடுகளைத் தவிர பொது இடங்களில் மின்விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் பொதுமக் களுக்கு மின்வாரியம் சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந் நிலையில், இத்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.