சென்னை
மென்பொருள் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் பணி நிறுத்தப் பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் மீண் டும் இந்தப் பணிகள் தொடங்கும்.
தபால் நிலையங்கள், இ-சேவை மையங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஆதார் எடுத்து வருகின்றனர். இவர் களில், 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு அங்கன்வாடி மையங் களில் ஆதார் எடுக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங் கியது. இத்திட்டத்தை செயல்படுத்த தமிழகம் முழுவதும் 434 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு கணினி, மடி கணினி மற்றும் கையடக்கக் கணினி ஆகிய உபகரணங்கள் ரூ.13.48 கோடி செலவில் வழங்கப்பட்டன.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலம் ஆதார் பதிவு குறித்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இவற்றில், தேர்ச்சி பெற்ற 1,700 பணியாளர்கள் கையடக்க கணினியின் மூலம் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், அங்கன்வாடி ஊழியர்கள் பயன்படுத்தும் கை யடக்க கணினியின் மென் பொருளை மேம்படுத்த தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்தது. இதனால், தொடர்ந்து ஆதார் எடுக்கும் பணியை மேற் கொள்ளவதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. இதனால் தற்காலிகமாக தற்போது அப்பணி நிறுத்தப்பட் டுள்ளது. இதை அறியாத பெற் றோர் பலர் குழுந்தைகளுடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுதொடர்பாக, ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி கள் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: அங்கன்வாடி மைய பணி யாளர்கள் மூலம் இதுவரை 1 லட்சத்து 64 ஆயிரம் குழந்தை களுக்கு ஆதார் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 25 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டி யுள்ளது. இந்தச் சூழலில், ஆதார் பதிவுக்கான மென்பொருளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேம்படுத்தும் பணி யில் ஈடுபட்டதால் கடந்த 3 மாதங் களாக ஆதார் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2-வது வாரத்தில்..
தற்போது அந்த பணி நிறை வடைந்த நிலையில், அதனை கையாள்வது குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவை நிறைவடைந்த பின் அடுத்த மாதம் 2-வது வாரத்துக்குள் அங்கன்வாடிகளில் மீண்டும் ஆதார் எடுக்கும் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக, தனித்துவ அடையாள ஆணைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தபால் நிலையங்கள், வங்கி, இ-சேவை மையங்களில் தொடர்ந்து ஆதார் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடங்களில் குழந்தைகளுக்கு ஆதார் எடுத்து கொள்ளலாம்” என்றார்.