தமிழகம்

உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னையில் நேற்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடிய திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலி னின் மகனான உதயநிதி திரைப் பட நடிகராகவும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முர சொலி நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார். கடந்த மக் களவைத் தேர்தலில் தந்தை ஸ்டாலி னுக்கு அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் உதய நிதி பிரச்சாரம் செய்தார். கருணா நிதி மறைவுக்குப் பிறகு திமுக வில் ஸ்டாலினுக்கு அடுத்து உதய நிதிக்கு அக்கட்சியினர் மரியாதை அளித்து வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்ற தைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதத்தில் திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி நியமிக்கப் பட்டார். அதன் பிறகு கட்சிப் பணி களில் அவர் தீவிரம் காட்டி வரு கிறார். திமுக இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

திமுக இளைஞரணிச் செயலாள ரான பிறகு முதல்முறையாக தனது பிறந்த நாளை உதயநிதி நேற்று உற்சாகத்துடன் கொண்டாடி னார். நேற்று காலை தனது தந்தை மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா விடம் வாழ்த்துப் பெற்றார். பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத் தில் மரியாதை செலுத்தினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகத் துக்கு வருகை தந்த உதயநிதிக்கு இளைஞரணி துணைச் செயலாளர் கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா உள் ளிட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு), மா.சுப்பிரமணியன் (சென்னை தெற்கு) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT