தமிழகம்

தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் 5 சுங்கச்சாவடிகளில் விரைவில் பாஸ்டேக் முறை 

செய்திப்பிரிவு

தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத் தின் கீழ் செயல்படும் 5 சுங்கச்சாவடி களிலும் ‘பாஸ்டேக்’ கட்டண முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க 'பாஸ்டேக்' (மின்னணு கட்டணம்) முறை வரும் டிசம்பர் 1 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. நாடுமுழுவதும் உள்ள 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளிலும் இதற் கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பாஸ்டேக் திட்டத்தின் படி, ஆர்எப்ஐடி (RFID - Radio-frequency Identification) சார்ந்த ‘பாஸ்டேக்' கார்டை வாகனத்தின் விண்டுஷீல்டில் ஒட்டி இயக்கலாம். இதன்மூலம் 10 விநாடிகளில் சுங்கச் சாவடிகளை கடந்து செல்ல முடியும். இதற்கிடையே, தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டண முறையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி தமிழக சாலை மேம் பாட்டு நிறுவனத்தின் அதிகாரி களிடம் கேட்டபோது, அவர்கள் கூறிய தாவது:

வாகன ஓட்டிகள் எளிமையாகவும், விரைவாகவும் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வகையில் பாஸ்டேக் கட்டண முறையை கொண்டுவர முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் வரும் சென்னை ராஜீவ்காந்தி சாலை யில் மொத்தம் 20 கி.மீ தூரத்துக்கு (பழைய மாமல்லபுரம் சாலை) பெருங் குடி, துரைப்பாக்கம், ஏகாட்டூர், சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே 2 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 5 இடங்களில் செயல்படும் சுங்கச் சாவடிகளில் இதை அறிமுகம் செய்ய வுள்ளோம். இதற்காக பல்வேறு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT