தமிழகம்

டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் திருட்டு 

செய்திப்பிரிவு

சோளிங்கர் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையின் சுவற்றை துளையிட்டு ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘சோளிங்கர் அடுத்த பாண்டியநெல்லூர் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இங்கு, மருதாலம் கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், சோளிங்கரைச் சேர்ந்த சம்பத் ஆகியோர் விற் பனையாளராக பணியாற்றி வரு கின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பிறகு கடையை மூடிவிட்டுச் சென்றனர்.

இதற்கிடையில், சோளிங்கர் காவல் துறையினர் டாஸ்மாக் மதுபானக் கடையின் வழியாக நேற்று காலை அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, கடையின் பின்பக்கம் துளையிடப்பட்டிருந்தைப் பார்த்து கடையின் மேற்பார்வையாளர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற செந்தில்குமார், கடையை திறந்து பார்த்தார். அங்கு ரூ.70 ஆயிரம் மதிப்பில் பெட்டி பெட்டியாக இருந்த மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மேற்பார்வையாளர் அளித்த புகாரின்பேரில், சோளிங்கர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT