ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக, கோவையில் நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தலைமை தேர்தல் ஆணையர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மண் டல அளவிலான இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு, மாநில தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் ஆர்.பழனிசாமி தலைமை வகித்தார். மாநில தேர்தல் செயலர் எல்.சுப்பிர மணியன், மாவட்ட ஆட்சியர்கள் கு.ராசாமணி (கோவை), ஜெ.இன்ன சென்ட் திவ்யா (நீலகிரி), கதிரவன் (ஈரோடு), விஜயகார்த்திகேயன் (திருப்பூர்), முதன்மை தேர்தல் அலுவலர்கள் பி.ஆனந்தராஜ், க.சரவணன், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் இராம.துரைமுருகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணி கள் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது.
மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி பேசும்போது, ‘கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 43 வட்டாரங் களில் 567 ஒன்றியக் குழு உறுப்பினர் கள், 59 மாவட்ட ஊராட்சி உறுப் பினர்கள், 6,819 கிராம வார்டு உறுப் பினர்கள், 753 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. நகர்ப்புறத்தைப் பொறுத்தவரை, மாநகராட்சியில் 220, நகராட்சியில் 420, பேரூராட்சியில் 1,647 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலுக் குத் தேவையான 18,103 வாக்குப் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.
நகர்ப்புற தேர்தலைப் பொறுத்த வரை, வாக்குப்பதிவு இயந்திரங் கள் முதல்நிலை ஆய்வு முடிக்கப் பட்டு, தேர்தல் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளன. நான்கு மாவட்டங்களில் 10,085 வாக்குச்சாவடிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 4 மாவட்டங்களில் 893 மண்டலங் கள் ஏற்படுத்தப்பட்டு, 893 மண்டல அலுவலர்கள் பணியில் அமர்த்தப் பட உள்ளனர். மொத்தம் 103 வாக்கு எண்ணிக்கை மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வழங்கப்படும் அறி வுரைகளுக்கேற்ப, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.