தமிழகம்

மாற்றுத் திறனாளிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ‘டிசம்பர்-3’ இயக்கத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை யில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். அவர் களை போலீஸார் கைது செய்து ராயப்பேட்டை சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர். மாலை 5.30 மணியளவில் அவர்களை அழைத்து வந்து,சேப்பாக்கம் பறக்கும் ரயில் பாலத்தின்கீழ் இறக்கிவிட்டுச் சென் றனர். இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் அந்த இடத்திலேயே 2-வது நாளாக நேற்றும் உண்ணா விரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தேவி நேற்று மாலை மயங்கி விழுந்தார். பின்னர் அவர் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

SCROLL FOR NEXT