ஆத்தூர் அடுத்த தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா அமையும் இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். உடன் தலைமைச் செயலர் சண்முகம், கால்நடைத்துறை செயலர் கோபால், சேலம் ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர். 
தமிழகம்

தலைவாசல் கால்நடை பூங்காவுக்கு ஜனவரியில் அடிக்கல்: கால்நடை மருத்துவக் கல்லூரி 2020-ல் செயல்படும்

செய்திப்பிரிவு

ஆத்தூர் அடுத்த தலைவாசலில் அமையவுள்ள சர்வதேச அள விலான கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவுக்கு முதல்வர் தலைமை யில் வரும் ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும். மேலும், இங்கு அமையும் கால்நடை மருத்துவ உயர் கல்வி கல்லூரி வரும் கல்வியாண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசலில் சுமார் 1,080 ஏக்கரில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை மற்றும் விலங்கின ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித் திருந்தார். இந்நிலையில், தலை வாசல் வி.கூட்டுரோட்டில் ஆராய்ச்சி நிலையம் அமைய வுள்ள இடத்தை கால்நடைப் பரா மரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் சண்முகம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வுக் குப் பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலைவாசலில் கால்நடைப் பூங்கா அமைப்பது குறித்து இறுதிகட்ட ஆய்வு நடத்தினோம். ஆராய்ச்சிப் பூங்காவுக்கென முதல்கட்டமாக ரூ.396 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், கால்நடை மருத்துவ உயர் கல்வி கல்லூரிக்கு ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சிப் பூங்காவுக்கான அடிக் கல் நாட்டு விழா வரும் ஜனவரி மாதம் முதல்வர் தலைமையில் நடத்தப்படும். இங்கு அமைக்கப் படும் கால்நடை மருத்துவ உயர் கல்வி கல்லூரி வரும் கல்வியாண்டு முதல் செயல்படத் தொடங்கும். இக்கல்லூரியில் எம்விஎஸ்சி., எம்.டெக், பிஎச்டி போன்ற உயர்கல்வி உலகத் தரத்தில் வழங்கப்படும்.

மீனவர்கள், தொழில்முனை வோரை ஊக்குவிக்க, பால் பொருட் கள் உற்பத்தி, பதப்படுத்தல், இறைச்சி பதப்படுத்துதல் உள் ளிட்ட தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும். கால்நடை மருத் துவக் கல்லுரியில் வரும் ஆண்டில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஆராய்ச்சி பூங்கா மூலமாக சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஓராண்டுக்குள் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT