வாழ்நாள் சான்றிதழ் அளிப்பதற் கான சேவையை வழங்காமல் வங்கிகள் தங்களை அலைக்கழிப்ப தாக, ஓய்வூதியதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவ்வாறு சேவை வழங்க மறுக்கும் வங்கிகள் குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் கூறியுள்ளார்.
அனைத்து ஓய்வூதியதாரர் களும், டிசம்பருக்குள் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியம் பெறும் தங்களுடைய வங்கிக் கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த வாழ்நாள் சான்றிதழை மின்னணு (டிஜிட்டல்) முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் வங்கிக் கிளைகளில் இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், வங்கிகளில் சென்று வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க ஓய்வூதிய தரர்களின் கைவிரல் ரேகை அல்லது கருவிழியைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், சில வங்கிக் கிளைகளில் இச்சேவை வழங்கப்படவில்லை என ஓய் வூதியதாரர்கள் புகார் தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து, ஓய்வூதியர் கள் கூறும்போது, “பதிவு செய்வ தற்கான உபகரணங்கள் இல்லை எனக் காரணம் கூறி அலைக்கழிக் கின்றனர். வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்குச் சென் றால், அங்கும் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக, வயதான வர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்” என்றனர்.
இதுகுறித்து, சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி கூடுதல் ஆணையர் சந்திரமவுலி சக்கரவர்த்தி கூறியதாவது:
வாழ்நாள் சான்றிதழை சமர்ப் பிப்பதற்கான சேவையை வழங்கு வதற்காக இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி ஆகிய வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இச்சேவையை வழங்குவதற்காக அந்த வங்கிகளுக்கு சேவைக் கட்டணத்தை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வழங்குகிறது.
எனவே, வங்கிகள் இச்சேவையை வழங்க மறுத்தால், ஓய்வூதியதாரர்கள் அருகாமையில் உள்ள மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் தெரிவிக்கலாம் அல்லது ro.chennai1@epfindia.gov.in, ro.chennai2@epfindia.gov.in என்ற இ-மெயில் மூலமும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும், ஓய்வூதியதாரர்கள் மின்னணு முறையிலான தங் களது வாழ்நாள் சான்றிதழை இந்தியாவில் எந்தப் பகுதியில் இருந்தாலும், அங்குள்ள இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஜீவன் பிரமான் மையங்கள் மூலம் சமர்ப் பிக்கலாம் அல்லது அருகில் உள்ள மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திலும் சென்று சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியதாரர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப் பிக்கும்போது, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், மொபைல் எண் மற்றும் பென்ஷன் பே ஆர்டர் எண் (பிபிஓ) ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
வங்கி மற்றும் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் இச்சேவைக்கு கட்டணம் வசூலிக் கப்படுவதில்லை. இ-சேவை, பொதுசேவை மையங்களில் சிறிய தொகை கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.