கோப்புப் படம் 
தமிழகம்

கோயம்பேடு சந்தையில் செயற்கையாக பழுக்க வைத்த 2 டன் வாழை பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தையில் செயற் கையாக பழுக்க வைக்கப்பட்ட 2 டன் வாழைப் பழங்கள், வண் ணம் சேர்க்கப்பட்ட 250 கிலோ பச்சைப் பட்டாணியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை கோயம்பேடு சந் தையில் வாழைப் பழத்தின் மீது எத்திலின் தெளிக்கப்பட்டு செயற்கையாக பழுக்க வைப்ப தாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்று பரவி வந்தது. இதன் அடிப்படையில், சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோயம்பேடு பழம், காய்கறி விற்பனை சந்தை மற்றும் மொத்த விற்பனை வளாகங்களில் உள்ள 75 கடைகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இந்த ஆய் வின்போது, 2 கடைகளில் வாழைப் பழங்களின் மீது எத்திலின் தெளித்து செயற்கை யாக பழுக்க வைக்கப்பட் டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த கடைகளில் இருந்து 2 டன் வாழைப் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், 4 கடைகளில் பச்சை பட் டாணி மற்றும் டபுள் பீன்ஸுக்கு செயற்கை வண்ணம் சேர்த்து விற்பனை செய்வது தெரிய வந்தது. அக்கடைகளில் இருந்து 250 கிலோ பச்சை பட்டாணியும், 10 கிலோ டபுள் பீன்ஸும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள் காய்கறியில் இருந்து மின் சாரம் தயாரிக்கும் ஆலை வளா கத்தில் கொட்டி அழிக்கப் பட்டது. நேற்று அதிகாலை தொடங்கிய ஆய்வு காலை 10 மணியளவில் நிறைவ டைந்தது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வால் கோயம்பேடு சந்தை பரபரப்புடன் காணப் பட்டது.

SCROLL FOR NEXT