வாக்களிப்பதன் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் ‘தேர்தல் விழிப்புணர்வு மன்றம் ’ தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர் சரி பார்ப்பு திட்டம் செப்.1-ம் தேதி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. வரும் 30-ம் தேதியுடன் இப்பணிகள் முடிந்து, டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட உள்ளது.
இப்பணிகள் குறித்தும், தமிழ கத்தில் பள்ளிகள்தோறும் தொடங் கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு மன்றம் குறித்தும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்காளர் சரிபார்த்தல் திட்டத் தின்கீழ், செல்போன் செயலி மூலம் 1 கோடியே 78 லட்சம் பேர் தங்கள் விவரங்களை சரிபார்த் துள்ளனர். கணினி வாயிலாக 40 ஆயிரம் பேரும், மற்றவர்கள் வாக்குச்சாவடி அலுவலர் வாயிலாகவும் சரிபார்த்துள்ளனர். 8 லட்சம் பேர் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். மொத்த முள்ள 5 கோடியே 99 லட்சம் வாக்காளர்களில் 99.4 சதவீதம் பேர் தங்களின் விவரங்களை சரி பார்த்துள்ளனர்.
பெரும்பான்மையான மாவட் டங்களில் 100 சதவீதமும், சென் னையில் 94 சதவீதம் பேரும் விவரங்களை சரிபார்த்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் விவரங்கள் திருத்தப்பட்ட பின்னர், டிசம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்.
தேர்தலில் வாக்களிப்பது அவ சியம் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தேர்தல் விழிப்புணர்வு மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 18 வயது நிறை வடைந்ததும் வாக்காளர் அடை யாள அட்டை பெற வேண்டும். தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கட்டுரை, பேச்சு, கவிதை, விளையாட்டுப் போட்டி கள் நடத்தி பரிசுகள் அளிக்கப்படும். மாதம் ஒரு மணி நேரம் என 4 மாதங்கள் சிறப்பு வகுப்பு நடத்தப்படும்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக, 3 ஐஏஎஸ் அதிகாரிகள், கோட்டாட்சியர்கள் என 8 பேர் கொண்ட குழு வுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்துள்ளது.
அவர்கள் மாவட்டம், சட்டப் பேரவை தொகுதிவாரியாக ஆசிரியர்கள், பள்ளி மாணவர் தலைவர்களுக்கு பயிற்சி அளிப் பார்கள். அதன்பின் தேர்தல் விழிப்புணர்வு மன்றம் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த விழிப் புணர்வு முகாமில் தேர்தல் தொடர்பான வீடியோ காட்சிகளும் ஒளிபரப்பப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.