கடலூர்
கடலூரில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்தை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத் தார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சுதந்திர போராட்ட தியாகியும், சமூக நீதிக்காக பாடு பட்டவருமான முன்னாள் அமைச் சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி யாருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் 1.5 ஏக்கரில் நினைவு மண்டபம் அமைக் கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை கடலூரில் நடந்தது.
தமிழக முதல்வர் பழனிசாமி நினைவு மண்டபத்தை திறந்து வைத்து பேசியதாவது: ராமசாமி படையாட்சியார், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு பாடுபட்டவர். அவர் 1952-ம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆரம்பித்து அதில் 18 எம்எல்ஏக்கள், 4 எம்பிக்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் ஆட்சி அமைக்க இவரே உறுதுணையாக இருந்தார்.
கடலூர் பேருந்து நிலையம், ரயில் பாதை, அரசு மருத்துவமனை, ஐடிஐ ஆகியவைகளுக்கு தனது சொந்த இடத்தை அரசுக்கு வழங்கி யவர். அவருக்கு முழு உருவச் சிலையுடன் நினைவு மண்டபம் அமைத்து தமிழக அரசு பெருமைப் படுத்தியுள்ளது. சட்டப்பேரவை யிலும் அவரது உருவப் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாள் அரசு விழா வாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா வேகமாக வளர்கிறது என்றால் அந்த வளர்ச்சிக்கு உரமாக பல விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம்தான் உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, அமைச்சர் சண்முகம் ஆகியோர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்து உள்ளனர். அது அரசின் பரிசீலனை யில் இருக்கிறது என்றார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் தலைமை தாங்கி பேசியதாவது:
அனைத்து சமுதாய மக்களும் மதிக்கக்கூடிய வகையில் நடந்து கொண்டவர் ராமசாமி படையாட்சி யார். அவருக்கு தமிழக அரசு நினைவு மண்டபம் அமைத்து பெருமைப்படுத்துகிறது என்றார்.
முன்னதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார். அமைச்சர்கள் சம்பத், அன்பழகன், சண்முகம், வீரமணி, துரைக்கண்ணு, சேவூர் ராமச் சந்திரன், கடம்பூர் ராஜூ, மணியன், எம்எல்ஏக்கள் பாண்டியன், முருகு மாறன், சத்யா பன்னீர்செல்வம் மற்றும் பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நினைவு மண்டபம் அமைத்த தற்கு ராமசாமி படையாட்சியாரின் மகன் ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.