காயல்பட்டினத்தில் பள்ளியைச் சூறையாடி ஆவணங்களை தீவைத்து எரித்த வழக்கில் 4 பேருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காயல்பட்டினம் தீவுத் தெருவில் வாடகை கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வந்தது. இக்கட்டிடத்துக்கான வாடகையை காயல்பட்டினம் கீழத் தெருவைச் சேர்ந்த செய்யது அக மது மகன் முகமது பாரூக் (67) என்பவர், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பெற்று வந்தார்.
இந்நிலையில், வாடகைப் பணம் மற்றொருவருக்கு மாற்றி வழங்கப்பட்டதாக பிரச்சினை எழுந்தது. இதையடுத்து, 9.6.2013 அன்று பள்ளிக்குச் சென்ற ஒரு கும் பல், வகுப்பறையை உடைத்து, ஆவணங்களை தீவைத்து எரித் தது. ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டதாக, பள்ளி தலைமை ஆசிரியை ஏசுவடியாள் பொன் னம்மா, ஆறுமுகநேரி போலீஸில் புகார் அளித்தார்.
இதன்பேரில், முகமது பாரூக் (67), பேயன்விளையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (29), கீழலட்சு மிபுரத்தை சேர்ந்த மலைமேகம் (47), தரன் (38), காயல்பட்டினம் அந்தோணிராஜ் (29) ஆகிய 5 பேரை யும் கைது செய்து, தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், ஆறுமுகநேரி போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். முகமது பாரூக் இறந்ததால், மற்ற 4 பேர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
பாலசுப்பிரமணியம், மலைமே கம், அந்தோணிராஜ், தரன் ஆகிய 4 பேருக்கும், தலா 10 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.13,500 அபராதமும் விதித்து, நீதிபதி கவுதமன் தீர்ப்பு கூறினார். போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன் ஆஜரானார்.