குட்கா விவகாரத்தில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 9 அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமை யாளர்கள் மாதவராவ், பங்கு தாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை ஏற் கெனவே தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த் தனை நடந்த புகார் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வரு கிறது. குட்கா விற்பனை மூலம் ரூ.639 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அடையாளம் தெரியாத மத்திய, மாநில அரசு அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தனி நபர்கள் மீது சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கடந்த ஜுன் மாதம் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.
அதைத்தொடர்ந்து, குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் 3 பேருக்கும் சொந்த மான 174 இடங்களில் உள்ள அசை யும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. மொத்தம் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.
குட்கா விவகாரம் தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை அம லாக்கப்பிரிவு தொடங்கியுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி ஆஜராகுமாறு முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் முன்னாள் கூடுதல் ஆணையர் நல்லசிவம், வடக்கு மண்டல ஐஜி வரதராஜூ, விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார், துணை ஆணையர் விமலா, 3-ம் தேதி ஐஜி தர், ஜோசி நிர்மல் குமார் மற்றும் சிலரையும் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.குட்கா விற்பனை மூலம் ரூ.639 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.