ஓட்டுநர்கள் மற்றும் சொந்த வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுநர்களை ஒன்றிணைத்து ‘டி டாக்ஸி’ என்ற புதிய செல்போன் செயலி சென்னையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. நெரிசல் மிகுந்த அலுவலக நேரத்துக்கு என தனியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ‘டி டாக்ஸி’ கூட்டுறவு சேவை சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ‘டி டாக்ஸி’ தொழில் கூட்டுறவு சேவை சங்கத் தலைவர் பாலாஜி கூறும்போது, ‘‘பெரிய, பெரிய பன்னாட்டு நிறுவனங்களால், சாதாரணமானவர்கள் இந்தத் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சொந்த வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களை ஒன்றி ணைத்து ‘டி டாக்ஸி’ என்ற செயலியை சென்னையில் தொடங் கியுள்ளோம்.
மற்ற இடங்களிலும் விரைவில் இந்த வசதி தொடங்கப்படும். இதில் ஓட்டுநர்கள், ரூ.100 பதிவு கட்டணம் மற்றும் மாதந்தோறும் ரூ.3,000 செலுத்துதல், அடுத்தது ரூ.100 செலுத்தி வருவாயில் 10 சதவீதம் செலுத்த வேண்டும் என்ற 2 வகையான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம்.
பொதுமக்கள் இந்த செல்போன் செயலியை கூகுள்பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள் ளலாம். இந்த கூட்டுறவு சங்க செயல்பாடுகள் தமிழக அரசின் தொழில் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும்.
குறைந்தபட்சம் ரூ.25
அரசு நிர்ணயித்துள்ளபடி, ஆட்டோவுக்கு குறைந்தபட்சமாக (1.8 கிமீ) ரூ.25 கட்டணமாகவும், இதுதவிர காத்திருப்பு கட்டணமாக நிமிடத்துக்கு 30 காசுகள் வசூலிப்போம். மினி காருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 எனவும் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ.1 எனவும் வசூலிக்கவுள்ளோம். அலுவலக நேரத்துக்கு என கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம்’’ என்றார்.
இதுகுறித்து முதன்மைக் கணக்காய்வு முன்னாள் தலை வரும், மக்கள் பாதை அமைப்பின் தலைவருமான நாகல்சாமி கூறும் போது, ‘‘பன்னாட்டு நிறுவனங் கள் தங்களது சேவை தொடங் கியபோது, குறைந்த கட்டணத்தில் அதிக சேவை எனத் தொடங் கினார்கள்.
மக்களுக்கு பயனளிக்கும்
தற்போது, அலுவலக நேரத் தில் ஒரு கட்டணமும், மற்ற நேரங் களில் ஒரு வகையான கட்டணத் தையும் வசூலிக்கிறார்கள்.
மேலும், சரியான சேவையை தற்போது வழங்குவதில்லை. எனவே, ஓட்டுநர்களாக ஒன் றிணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை மக்களுக்கு பய னுள்ளதாக இருக்கும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தவிர்க்கப் படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.