கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் சவ்சவ் காய் விளைச்சல் அதிகம் இருந்தும், குறைந்த விலையே கிடைப்பதால் மலை விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, பால மலை, அடுக்கம், கே.சி.பட்டி, பன்றிமலை உள்ளிட்ட பகுதி களில் சவ்சவ் அதிகளவில் விளை விக்கப்படுகிறது. இந்தக் காய் ஆண்டு முழுவதும் விளை வதால், தொடர்ந்து சந்தைக்கு வரத்து இருக்கும். சாகுபடி செய்த 3 மாதத்தில் கொடி வளர்ந்து சவ்சவ் காயை அறுவடை செய்யலாம்.
கடந்த ஆண்டுகளில் அதிகபட்சமாக ஒரு கிலோ சவ்சவ் காய் ரூ.30 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு போதுமான லாபம் கிடைத்தது. இந்த ஆண்டு விளைச்சல் நல்ல முறையில் இருந்தபோதும், வெளிமார்க்கெட்டிலேயே ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கிறது. இதனால் விவசாயிகளிடம் குறைந்தவிலைக்கே மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இதனால் தாங்கள் செலவு செய்த தொகைக்கே பாதகம் ஏற்பட்டு இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ ரூ.20-க்கு எங்களிடம் வியாபாரிகள் கொள்முதல் செய் தால் தான், குறிப்பிட்ட அளவு லாபமாவது கிடைக்கும் என்ற நிலை உள்ளது என மலை விவசா யிகள் தெரிவிக்கின்றனர்.