இ. மணிகண்டன்
செண்பகத் தோப்பு வனப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவ தாகப் புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத் தூரில் சாம்பல் நிற அணில் வன உயிரினச்சரணாலயம், விருதுநகா்- மதுரை மாவட்ட பகுதியில் உள்ள மேற்குத் தொடா்ச்சிமலையில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் பல அரியவகை தாவரங்கள், புலி, கரடி, யானை, சிங்கவால் குரங்கு, வரையாடு உள்ளிட்ட விலங்குகள், கிரேட் இந்தியன் ஹார்ன்பில், ஸ்ரீலங்கன் பிராக் மவுத், மலபார் விசிலிங் திரஸ், மரகதப்புறா மற்றும் ஹார்ன் அவுல் போன்ற 247 பறவையினங்களும் உள் ளன. செண்பகத் தோப்பு வனப்பகுதியில் தனியார் பண்ணைகள் மற்றும் தோட்டங்களும் உள்ளன. அத்தோடு இப்பகுதியில் வனப் பேச்சியம்மன் கோயிலும் உள்ளது.
இங்கு சனி, ஞாயிறு மற்றும் பொது விடு முறை நாட்களில் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்வது வழக்கம். ஆனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களோ, கேரி பைகளோ கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வனப்பகுதியில் பல இடங்களில் பிளாஸ்டிக் பைகள், மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்கள் ஏராளமாக கிடக்கின்றன. சுற்றுலா வரும் இளைஞர்கள் பலர் வனப்பேச்சியம்மன் கோயிலின் பின்புறம் ஓடும் காட்டாற்றைத் தாண்டி வனப் பகுதிக்குள் நுழைந்து மது அருந்துவதோடு, சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. வனத்தின் இயற்கையை மாசு படுத்தும் சமூக விரோதிகள் மீது போலீஸாரும், வனத்துறையினரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள், இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத் துகின்றனர்.