தமிழகம்

உள்ளாட்சிப் பதவிகளுக்கு ‘சீட்' தருவதாக அமமுகவினருக்கு ‘பாச வலை’ வீசும் அதிமுக

செய்திப்பிரிவு

சிவகங்கை

உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு ‘சீட்' கொடுப்பதாகக் கூறி, அம முகவினரை தங்கள் கட்சிக்கு இழுக்க அதிமுக நிர்வாகிகள் தீவி ரம் காட்டி வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற மக்க ளவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக படு தோல்வி அடைந்தது. இதனால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட் பட பலர் அதிமுக, திமுகவுக்குச் சென்றனர். ஆனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் வார்டு அளவில் மக்களிடம் செல் வாக்குடன் இருக்கும் பலர் இன் னும் அமமுகவில்தான் உள்ளனர்.

அதேபோல் 2011-ல் கவுன்சிலர் களாக வெற்றி பெற்றவர்களில் சிலரும் அக்கட்சியிலேயே உள் ளனர். இந்த உள்ளாட்சித் தேர்தலில் பெறும் வெற்றியை காட்டி, 2021-ல் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி மேயர் , நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளைக் கைப் பற்ற மறைமுகத் தேர்தலை அறிவி த்துள்ளது.

இதனால் மேயர், தலைவர் பதவிகளை தேர்வு செய்வதில் எந்த சிக்கலும் ஏற்படாமல் இருக்க அதிகளவில் வார்டு கவுன்சிலர்களை வெற்றி பெற வைக்க வேண்டுமென அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், அமைச் சர்களுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதனால் விருப்ப மனு கொடுத் தவர்களில் திருப்தி இல்லாத வார்டுகளில், அந்த வார்டுகளில் செல்வாக்குடன் இருக்கும் அமமு கவினரை தங்கள் கட்சிக்கு இழுக்கும் முயற்சியில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அமமுகவில் இருந்து வரு வோருக்கு எந்தவித இடையூறும் இன்றி சீட் கொடுக்கப்படும் என உறுதி அளித்து வருகின்றனர்.

இதேபோல ஊராட்சி ஒன் றியம், மாவட்ட ஊராட்சி வார் டுகளிலும் செல்வாக்குள்ள அம முகவினரிடம் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரு கின்றனர்.

மேலும் வார்டுகளில் வெற்றி பெற்றால் கட்சி பதவியும் பெற் றுத் தரப்படும் என பாசவலை வீசியுள்ளனர். இதில் அமமுகவினர் சிக்குவார்களா என்பது தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு தெரிந்து விடும்.

SCROLL FOR NEXT