கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் ஜி.அரியூரில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த 2018-19-ம் கல்வி யாண்டில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒரு வளாகத்தில் மாண வர்களுக்கான வகுப்பறைக் கட்டிடங்களும், மாணவிகளுக்கான வகுப்பறைக் கட்டிடங்களும் இயங்கி வருகின்றன. பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 310 மாணவிகளும், ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 280 மாணவர்களும் பயிலுகின்றனர்.
இதில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சத்துணவு சமைக்க இதுவரை கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் வகுப்பறை கட்டிடத்தின் அருகிலுள்ள மரத்தடி யில் உணவு சமைக்கப்படுகிறது. தற்போது பருவ மழை பெய்துவரும் நிலையில், சத்து ணவு பணியாளர்கள் மழையில் நனைந்தவாறே விறகு அடுப்பை பயன்படுத்தி சமைத்துக் கொண்டிருந்தனர்.
திறந்தவெளியில் சமைப்பது குறித்து சத்து ணவு அமைப்பாளரிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டு தான் பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை கட்டிடம் கட்டப்படவில்லை. சமைய லுக்கான அடுப்பு மற்றும் சிலிண்டர் உள்ளிட் டவை வழங்கக் கோரி திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு கடிதம் கொடுத்துள்ளோம். தற் போது சமையல் பாத்திரங்களும் கேட்டுள் ளோம்” என்றார்.
அதே வளாகத்தில் மாணவர்களுக்கான சமையல் கூடத்தில் இருந்த பணியாளர்களிடம் கேட்டபோது, “எங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட அடுப்பில் எரிவாயு கசிவு ஏற்படுவதால், பல இடங்களுக்கு தீ பரவுகிறது. எனவே தான் மேல்நிலைக் குடிநீர் தொட்டிக்கு கீழே விறகு அடுப்பு ஏற்படுத்தி சமைத்து வருகிறோம். தற்போது மழை பெய்கிறது. இருந்தாலும் இங்கே தான் சமைக்க வேண்டியுள்ளது” என்றனர்.
இதுதொடர்பாக திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளார் சீனுவிடம் கேட்டபோது, “திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 92 சத்துணவு மையங்கள் மூலம் சுமார் 14,500 மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. 5 மையங்களுக்கு சமையல் கூடம் இல்லை. தற்போது அரியூர் பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நிலையில் சமையல் கூடம் உள்ளிட்ட இதர தேவைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்திற்கு கோப்புகள் அனுப் பியுள்ளோம். எரிவாயு அடுப்பில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அமைப்பாளரே சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்காக ரூ.1,000 மட் டுமே அரசு வழங்கும்” என்றார்.
திறந்த வெளியில் சமைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவுறுத் தியுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் சமையல் கூடம், அடுப்பு மற்றும் சிலிண்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் நடைமுறையில் இன்னும் அவை செயல்படுத்தப்படவில்லை என்பது வேதனையாக உள்ளது என்கிறனர் பெற்றோர்.