சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் 
தமிழகம்

புதுச்சேரியில் கனமழை: 24 மணிநேரத்தில் 7.7 செ.மீ. மழை பதிவு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி முழுவதும் காலை முதல் 3 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று (நவ.22) காலை முதல் கனமழை பெய்யத்தொடங்கியது. சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரப்பகுதியில் உள்ள புஸ்ஸி வீதி, லெனின் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் நீந்தியபடி சென்றன. கிராமப் பகுதிகளான மூலக்குளம், பாகூர், வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம், பத்துக்கண்ணு, திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. தொடர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 7.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT