கல்வி உரிமை காக்க சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடை இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. எழும்பூர் ராஜரத்தினம் விளை யாட்டு அரங்கத்தில் தொடங் கிய இந்த பேரணியை முன்னாள் துணைவேந்தர்கள் ச.முத்துக் குமரன், வே.வசந்திதேவதி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், வழக்கறிஞர் ச.செந்தில்நாதன், கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் தொடங்கி வைத்தனர். இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக பேரணி ஒருங் கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, ‘‘கல்வித்துறை யில் உலக வர்த்தக அமைப்புக்கு விடுத்துள்ள சந்தை வாய்ப்பு ஒப்பளிப்புகளை இந்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இதற்காக பலரிடமும் கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்பவுள்ளோம்.’’ என்றார்.