மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொலை வழக்கில் சிறை தண் டனை அனுபவித்து வந்த 13 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பதில ளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
மேலூர் அருகே மேலவளவில் 1996-ல் ஊராட்சித் தலைவராக இருந்த முருகேசன் உட்பட 7 பேர், 1997-ல் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 17 பேரில் 5 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த 60 வயதை தாண்டிய 3 பேர் அண்ணா பிறந்தநாளையொட்டி முன்விடுதலை செய்யப்பட்டனர்.
ஒருவர் இறந்த நிலையில் 13 பேர் மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்த 13 பேரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நவ.9-ம் தேதி தமிழக அரசால் முன்விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் விடுதலை தொடர்பான அரசாணையின் நகலைக் கேட்டு மூத்த வழக்கறிஞர் பி.ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 13 பேர் முன்விடுதலை தொடர்பான அரசாணை மற்றும் ஆவணங்களை அரசு வழக்கறிஞர் தினேஷ்பாபு தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: முருகேசன் உட்பட 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சாதி அடிப்படையிலான கொலை என்பதை நிரூபிக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்யாததால் குற்றவாளிகளுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தண்டனை வழங்கப்படவில்லை என உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டில் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளது.
அப்படியிருந்தும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரை கருத்தில் கொண்டு, இதனால் சமூகத்தில் என்ன எதிர் விளைவுகள் ஏற்படும் என்பதை பரிசீலித்த பிறகே விடுதலை தொடர்பாக முடிவெடுக் கப்பட்டதா என்பது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
நன்னடத்தை அடிப்படையில் சிறைக் கைதிகளை விடுவிக்கும் போது அது தொடர்பாக பட்டி யல் தயாரித்து முன்னுரிமை அடிப் படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவ்வாறு தான் 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனரா? எந்த அடிப்படையில் முன்னுரிமை முடிவு செய்யப்பட்டது? என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது.
இதற்காக முன்விடுதலை கைதி களின் பட்டியலை அரசு தாக்கல் செய்ய வேண்டும். எதிர் தரப்பின ரின் கருத்துகளையும் கேட்க வேண்டியது இருப்பதால், விடுவிக் கப்பட்ட 13 பேரையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தர விடுகிறோம் என்று தெரிவித்த னர்.
இந்நிலையில், 13 பேர் விடுவிக் கப்பட்டதை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்ய வழக் கறிஞர் ரத்தினம் அனுமதி கோரி னார். இதையேற்று அதற்கேற்ப வழக்கின் கோரிக்கையில் திருத்தம் செய்யக்கோரி மனுதாரருக்கு அனுமதி வழங்கி விசாரணையை நவ.25-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.